Pallapatti Writer

இஸ்லாமிய வழியில் வாழ்க்கை

0

 
இஸ்லாமிய வழியில் வாழ்க்கை 


இஸ்லாம் என்பதற்கு அமைதி பெறுதல் என்று பொருள். இஸ்லாம் சாந்தியும் சமாதானமும் மிக்க மானுடவாழ்க்கைக்கு  வழிகாட்டுகிறது. இது மனிதர்களுக்கு மனிதத்தை கற்றுத்தருகிறது. 'மனித குலம் முழுவதும் ஒரே குடும்பமே நாம் ஆதத்தின் வழிதோன்றல்களை கண்ணியம் அளித்துள்ளோம்.'என்று திருமறையிலே கூறி மானுட இனம் முழுவதையும் ஒரே கயிற்றால் பிணைத்து ஒற்றுமையை வளர்க்கிறது.

மனிதர்களுக்கிடையே செயல்களால், வார்த்தைகளால்,எண்ணத்தாலும் தீங்கிழைக்காமல்  இறையச்சம் என்ற உணர்வூட்டி வாழ வைக்கிறது. 

மனிதர்களின் நற்செயல்களுக்கு மறுமையிலே கூலி உண்டு என்று கூறி நற்பண்புகளை வளர்த்து மனிதர்களை நேசத்தால் இணைக்கிறது. 'அண்டை வீட்டு காரன் பசித்திருக்க தான் மட்டும் உணவு உண்பவன் முஸ்லிமாக மாட்டான்' என்ற நபிமொழி மத,இன,இட,ஜாதி களை கடந்து மனிதத்தை விதைக்கிறது.
 பெற்றோர்,உறவினர்,அனாதை,முதியோர்,நோயாளி,ஏழைகள் போன்ற உதவிதேவைப் படுவோருக்கான உதவி செய்வதை கடமையாக்கிய மார்க்கமே இஸ்லாம். 
பொதுவாக  அகிலம் அனைத்தும் படைத்த கடவுள் ஒருவனே.அவன் படைப்புக்கள் அனைத்தையும் 'தாயை விட மேலாய் நேசிக்கிறான் ' நாம் இறைவனின் நேசத்தை பெற வேண்டும் எனில் அவனின் படைப்புகளை  நேசித்து உலகம் அமைதியுடன் இயங்க உதவ வேண்டும் என்பதே இஸ்லாம் காட்டிய வழி .


இந்த போன்ற articles நம்ம மொழியிலேயே படிக்க கீழ இருக்குற bell பட்டனை press பண்ணுங்க

0 comments:

Post a Comment